முகப்புகோலிவுட்

‘தர்பார்’ படத்தின் காட்சிகள் லீக்… வைரலாகும் புகைப்படத்தால் படக்குழு அதிர்ச்சி!

  | August 28, 2019 13:32 IST
Darbar

துனுக்குகள்

 • வட இந்தியாவில் தர்பார் படப்பிடிப்பு நடந்து வருகிறது
 • இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்
 • நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்துவருகிறார்
பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு வட இநத்தியாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்தே படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பிரச்னை படக்குழுவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
p9378gv8

 இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் கடுமையான கட்டுபாகளை வித்தித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு போலீஸ் சீருடை அணிவித்து ஸ்டூடியோவில் வைத்து ‘போட்டோ சூட்' நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு, நயன்தாரா ஆகியோர் கிரிக்கெட் மைதானத்தில் இருப்பது போன்ற காட்சிகள் வெளிவந்தன. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர். செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. கடும் பாதுகாப்பையும் மீறி ஜெய்ப்பூரில் உள்ள பின்க் நகரில் தற்போது நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
 
இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி தோற்றத்தில் கார் அருகே நிற்கிறார். அவர் பக்கத்தில் நயன்தாராவும் நின்று கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்னும் 2 வாரங்கள் இதே ஊரில் படப்படிப்பை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com