முகப்புகோலிவுட்

ஐஸ்வரியா தனுஷ் எடுத்துள்ள புதிய முயற்சி.! மக்களின் நலனுக்காக வாரம் 3 டிப்ஸ்..!

  | July 03, 2020 17:09 IST
Wellness Wednessday With Aishwaryaa

சென்ற புதன்கிழமை முதல் இதனை தொடங்கிய ஐஸ்வர்யாவுக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமான படம் ‘3'. இதில் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். இதனையடுத்து கெளதம் கார்த்திக்கை வைத்து ‘வை ராஜா வை' என்ற படத்தையும், ‘சினிமா வீரன்' என்ற ஆவணப் படத்தையும் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார்.

மூன்று மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பூட்டுதல் நடைமுறையில் உள்ள நிலையில், பொழுதுபோக்கு துறையில் உள்ள பிரபலங்கள் உடற்பயிற்சி, யோக, டான்ஸ், பாடல் என தங்களை பிஸியாக வைத்திருக்கிறார்கள். மேலும், அவை அனைத்தையும் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்கின்றனர். மேலும் பலர் தங்களது பழைய நினைவுகளைக் கொண்ட த்ரோபேக் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இப்போது, ஐஸ்வர்யா தனுஷும் தனது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு உடற்பயிற்சி குறிப்புகளை வழங்க சமூக ஊடகங்களில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பகத்தில் “நீங்கள் வீட்டில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். பல மாதங்கள் பூட்டப்பட்டதன் மூலம் நாம் அனைவரும் மிகவும் வலுவாக இருந்தோம், அது மிகவும் உற்சாகமூட்டுகிறது. பூட்டுதல் நம் உடல் மற்றும் மன நலனை பாதிக்கக்கூடும் என்று எனக்குத் தெரியும் எனவே உங்கள் தேவைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஒவ்வொரு புதன்கிழமையும், ‘wellness Wednessday with Aishwaryaa' என்ற பெயரில் என ஒரு யோகா போஸ், மனநல பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து குறிப்பு என 3 உடல் மற்றும் மன நல குறிப்புகளை பகிர்ந்துகொள்ள போகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

I hope you are safe, happy, and healthy at home. We've all stayed so strong through so many months of lockdown, and it's so inspiring. I know the lockdown can take a toll on our physical and mental wellbeing so it's very important you pay attention to your needs. every Wednesday, I'm going to try and post something for #WellnessWednesdayWithAishwaryaa - 3 tips on how you can care for your mind and body. It's going to be - A yoga pose - A mindfulness exercise - A nutrition tip Do remember to tag me, @sarvayogastudios, @thedivayoga & #WellnessWednesdayWithAishwaryaa when you do it. I'd love if you guys participate in this challenge which if all about caring for yourself. So, here we go! 1. Yoga Pose - Elevated Plank Pose with Yoga Blocks/Chair/Short Stool
 - To get into the pose, place your feet on the elevated chair, sofa or a short stool. Ensure that your body is a straight line from your shoulder to your heels. - Keep your wrists under your shoulder and contract your abs so it's tight - Look straight down at the floor to avoid any strain on your neck muscles - Elevating your legs makes the pose a little more challenging. If you're not able to do this, you can do a normal plank - Hold this pose for as long as you can and carefully come out of it, bringing one leg down at a time 2. Mindfulness Tip - Start a gratitude journal. Every day, write down one thing you're thankful for/you love/you adore. Keep going back to it whenever you feel low 3. Nutrition Tip - Start each day with a warm cup of lemon water to cleanse your system from within. Take care and stay happy and stay safe ! #WellnessWednesdayWithAishwaryaa #yogaplus #fitindiamovement #mylifemyyoga #sarvayoga #divayoga

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on

சென்ற புதன்கிழமை முதல் இதனை தொடங்கிய ஐஸ்வர்யாவுக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவைப் பொருத்தவரை அடுத்ததாக, தனுஷின் ‘வண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரிப்பில், ஒரு ஹாரர் திரைப்படத்தை இயக்கவுள்ளதாவும், அதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் சில தகவல்கள் உள்ளன. மேலும், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் பயோபிக் இயக்குவதாகவும் சில செய்திகள் வெளியனது குறிப்பிடத்தக்கது.



    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com