முகப்புகோலிவுட்

ரஜினி மகள்கள் கொண்டாடிய தர்பார் FDFS..! வைரலாகும் இன்ஸ்டா ஃபோட்டோஸ்..

  | January 09, 2020 18:18 IST
Darbar Fdfs

தர்பார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரஜினியின் மகள்கள் பதிவிட்ட இன்ஸ்டா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தர்பார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரஜினியின் மகள்கள் பதிவிட்ட இன்ஸ்டா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தர்பார்'. இப்படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடிவரும் நிலையில், ரஜினியின் மனைவியான் லதா ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் முதல் ஷோவைப் பார்த்து ரசித்துள்ளார்.

We live you ....love you Appa ! #sistersquad #darbar

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on


அதே திரையரங்கில் ரஜினியின் மகள்களான சௌந்தர்யா மற்றும் ஐஸ்வரியாவும் முதல் காட்சியைப் பார்த்தனர். சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் திரையரங்கில் உற்சாகமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “இப்படித்தான் எனது நாள் தொடங்கியது” என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐஸ்வரியா தனது இன்ஸ்டா பக்கத்தில், சகோதரிகள் இருவரும் ஸ்பெஷல் 'Darbar Hoodie' அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகிவருகிறது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்