முகப்புகோலிவுட்

தலைவர் 168 லேட்டஸ்ட் அப்டேட்..!

  | January 13, 2020 17:00 IST
Thalaivar 168

துனுக்குகள்

  • தலைவர் 168 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
  • இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.
  • இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
தலைவர்168 திரைப்படத்திலிருந்து ரஜினியின் இண்ட்ரோ பாடல் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்' திரைப்படத்தையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் ‘தலைவர் 168' என அழைக்கப்படுகிறது. இப்படத்தை ‘சிறுத்தை' சிவா இயக்குகிறார். மேலும், இப்படத்தை ரஜினியின் எந்திரன், பேட்ட ஆகிய திரைப்படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்துக்கு இசையமைப்பாளராக டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில், இளம் கதாநாயகி கீர்த்தி சுரேஷ், காமெடி நடிகர் ‘பரோட்டா' சூரி, மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக குஷ்பு இப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபில்ம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இப்படத்தில், ரஜினியின் அறிமுக பாடல் குறித்த முக்கிய விவரம் தற்போது கசிந்துள்ளது. அதாவது, தர்பார் திரைப்படத்தின் ‘சும்மா கிழி' பாடலைப் பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் தான் தலைவர் 168 திரைப்படத்திலும் ரஜினிக்கு இண்ட்ரோ பாடலை பாடவுள்ளதாகவும், அப்பாடல் வரிகளை விவேகா எழுதுவதாகவும் தகவல்கல் வெளியாகியுள்ளன. பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரஜினியின் 90 சதவீத அறிமுகப் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்