முகப்புகோலிவுட்

தேர்தலில் கமலுடன் இதற்காக கூட்டணி அமைப்பேன்! ரஜினிகாந்த் அதிரடி!

  | November 20, 2019 13:07 IST
Rajinikath

துனுக்குகள்

  • விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி
  • மக்கள் நலுனுக்காக கமலுடன் கைக்கோர்பேன்
  • ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு கட்சி தொடங்கவிருக்கிறார்
உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் கமல் அரசியல் கட்சி தொடங்கி ஒரு தேர்தலையும் சந்தித்து விட்டார். கணிசமான வாக்குகளை பெற்று  அடுத்த தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்.
 
நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்கிற அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு கடந்த 2017ம் ஆம் முடிவுக்கு வந்தது. போருக்கு தயாராகுங்கள் என்கிற அவரின் அரைகூவல் ரஜினி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கட்சியின் பெயர் என்ன, கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் என்ன என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. அவ்வப்போது அரசியல் குறித்த விமர்சனங்களை கூறி அரசியல் தளத்தில் ஒரு சிறிய அதிர்வுகளை எற்படுத்தி வருகிறார்.
 
சமீபத்தில் திருவள்ளுவரை காவிமயமாக்கும் சர்ச்சை குறித்து ரஜினி பேசிய கருத்து அரசியல் தளத்தில் விவாதமாக மாறியது. ரஜினிகாந்த்தின் ஆன்மீக அரசியல் பி.ஜே.பி- யின் கொள்கைகளின் அடிப்படையிலானது என பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திருவள்ளுவர் பிரச்னையில் அவர் கூறிய கருத்து மிக முக்கியமானதாக கருதப்பட்டது.
 
 
இந்நிலையில் ரஜினி அடுத்த ஆண்டு கண்டிப்பாக கட்சி தொடங்கி விடுவார் என பலர் தெரிவித்து வருகிறார்கள். கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தனித்தனியே போட்டியிட்டால் திராவிட கட்சிகளுக்கு எதிரான வாக்குகள் பிரியும் என்றும், இருவரும் இணைந்து செயல்பட்டால் வலுவான கூட்டணியாக அமையும் என்றும் அரசியல் விமர்சர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவாவில் நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "மக்களின் நலனுக்காக, நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்" என்று கூறினார். தற்போது இவருடைய கருத்து இன்று அரசியல் தளத்தில் இன்னொரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்