முகப்புகோலிவுட்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினியுடன் அமிதாப் ! வைரலாகும் புகைப்படம்!

  | November 20, 2019 15:23 IST
Rajinikanth

துனுக்குகள்

 • 50 வது சர்வதேச விழா கோவாவில் தொடங்கியது
 • இந்த விழாவிற்கு ரஜினி சென்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது
 • இந்த விழாவில் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படம் திரையிடப்படுகிறது
தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு இணைந்து 50-வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நடிகர் ரஜிகாந்திற்கு  ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜுப்ளி' என்கிற சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது
 
தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் இந்நிகழ்வில் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
 
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அமிதாப்பை கவுரவிக்கும் வகையில் அவர் நடித்த 6 படங்கள் திரையிடப்படுகின்றன. இதேபோல பொன்விழா ஆண்டையொட்டி சிறந்த 12 திரைப்படங்களின் வரிசையில் கே.பாலசந்தர் இயக்கிய ‘இரு கோடுகள்' திரையிடப்படுகிறது.
 
பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7' மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்' ஆகிய 2 தமிழ்த் திரைப்படங்களும் தேர்வாகியுள்ளன. இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் மிஷ்கின், வெற்றிமாறன், ராம், விக்னேஷ் சிவன், நடிகைகள் நித்யா மேனன், தமன்னா, டாப்சி உள்ளிட்டோர் திரை தொழில்நுட்பம் சார்ந்து பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com