முகப்புகோலிவுட்

“முதல்வர் ஆவேன் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்” – எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த ரஜினி!

  | November 18, 2019 11:55 IST
Rajinikanth

துனுக்குகள்

 • நேற்று மாலை இந்த நிகழ்வு சென்னையில் நடைபெற்றது
 • திரைத்துறை கலைஞர்களுடன் ரஜினி இந்த நகழ்வில் கலந்துக்கொண்டார்
 • இந்நிகழ்வில் ரஜினி எடப்பாடி பழனிச்சாமி குறித்து விமர்சனம் செய்துள்ளார்
நடிகர் கமலின் 65வது வயது பிறந்த நாள் கொண்டாட்டம் பல்வேறு நிகழ்ச்கிளாக கொண்டாடப்பட்டு வந்தது. நேற்று இறுதி நிகழ்வாக “உங்கள் நான்” என்கிற நிகச்சி சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி 'கமல் 60' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைத்துறையுணர் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் ரூ. 1 கோடியை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர்.
 
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், "முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள். ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது, இன்று நடக்கிறது, நாளையும் நடக்கும்" என கூறினார். இதற்கு முன்பு சேலத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி, கமல் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com