முகப்புகோலிவுட்

‘குரு’ படப்பிடிப்பில் மணிரத்னம் & ஐஸ்வர்யா! அசத்தலான ஃபோட்டோவை த்ரோபேக் செய்த ராஜீவ் மேனன்!

  | September 02, 2020 15:48 IST
Rajiv Menon

ராஜீவ் கடைசியாக ஜி.வி. பிரகாஷ் மற்றும் அபர்ணா பாலமுரளி இணைந்து நடித்த ‘சர்வம் தாளமயம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

மணி ரத்னத்தின் 'குரு' 2007-ல் வெளியானபோது நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கதை, காட்சிகள் மற்றும் அதன் இசை - படத்தின் ஒவ்வொரு கூறுகளும் சமமாக பாராட்டப்பட்டது.

இப்படத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் மாதவன், வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் ஆர்யா பப்பர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

நிஜ வாழ்க்கை ஜோடிகளான அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு இடையிலான அழகிய காதலை படம் பிடிக்க முடிந்தது. இப்படத்தில் பல அழகான தருணங்கள் உள்ளன. படத்தில் இந்த ஜோடி தங்கள் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுக்கும்போது இசையமைக்கப்பட்ட ‘ஜோடி ஜோடி' என்ற பாடல் ரசிகர்களைக் கவர்ந்தது.

இப்படம் வெளியாகி பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், ஒரு அபிமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில், ராஜீவ் மேனன், மணிரத்னம் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இரட்டையர்களை மிகவும் பாசத்துடன் பார்க்கிறார்கள். ராஜீவ் மேனன் இந்த புகைப்படத்திற்கு “படப்பிடிப்புக்கு முன்பு இரட்டையர்களை இயக்குநரும் குழுவினரும் ரசித்து பார்க்கிறார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

பணி முன்னணியில், ராஜீவ் கடைசியாக ஜி.வி. பிரகாஷ் மற்றும் அபர்ணா பாலமுரளி இணைந்து நடித்த ‘சர்வம் தாளமயம்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இப்போது, ராஜீவ் மேனன் தனது ஒளிப்பதிவில் விரைவில் வெளியாகவுள்ள ‘சுமோ' திரைப்படத்துக்காகக் காத்திருக்கிறார். இப்படத்தில் ‘மிர்ச்சி' சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்துள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com