முகப்புகோலிவுட்

’56,000 ஸ்க்ரீனில் ரிலீஸ் ஆகும் 2.0’- இந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் பிரமாண்டம்!

  | June 05, 2019 11:44 IST
2.0

சீனாவில் வரும் ஜூலை 12 ஆம் தேதி, 56,000 ஸ்க்ரீன்களில் வெளியாகிறது 2.0

துனுக்குகள்

  • சென்ற ஆண்டு நவம்பர் 29-ல் 2.0 ரிலீஸ் ஆனது
  • 2.0, உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்தது
  • இயந்திரன் படத்தின் இரண்டாவது பாகம்தான் 2.0
‘காலா' படத்தின் ஹிட்டிற்குப் பிறகு ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி 3D தொழில்நுட்பத்தில் வெளியான படம் ‘2.0'.

‘எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகமான இதனை ஷங்கர் இயக்கியிருந்தார். ‘லைகா புரொடக்ஷன்' நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் டூயட் பாடி ஆடியிருந்தார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்திருந்தார்.
‘இசைப் புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இந்தியாவிலும், ரிலீஸான அத்தனை இடங்களிலும் வசூல் சாதனை புரிந்த 2.0, தற்போது சீனா ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

சீனாவில் வரும் ஜூலை 12 ஆம் தேதி, 56,000 ஸ்க்ரீன்களில் வெளியாகிறது 2.0. இந்திய படங்களுக்கு சீனாவில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 2.0-வுக்கு அதிரடி ஓப்பனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்