முகப்புகோலிவுட்

தனுஷின் 'ஜகமே தந்திரம்' : 5 மில்லியன் வியூஸ் - இணையத்தை கலக்கும் ரகிட..ரகிட..ரகிட..!

  | August 01, 2020 10:21 IST
Rakita Rakita Rakita Lyrical Video

துனுக்குகள்

  • தனுஷ் ஒரு அரிய திறமை கொண்டவராகவும் மற்றும் தனது மாறுபட்ட நடிப்பால்
  • கடைசியாக பொங்கல் வெளியீடான ‘பட்டாஸ்' திரைப்படத்தில் காணப்பட்ட அவர்
  • தனுஷ் குரலில் ஒலிக்கும் "எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... என்று தொடங்கும்
தனுஷ் ஒரு அரிய திறமை கொண்டவராகவும் மற்றும் தனது மாறுபட்ட நடிப்பால் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்ற கதாநாயகனாகவும் வலம் வருகிறார். 18 ஆண்டுகளுக்கு முன்பு ‘துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் சினிமா உலகில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர் இப்போது 40 படங்களைக் கடந்து அசைக்கமுடியாத தூணாக நிற்கிறார். அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரும் ஆவார்.

கடைசியாக பொங்கல் வெளியீடான ‘பட்டாஸ்' திரைப்படத்தில் காணப்பட்ட அவர், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது ‘ஜகமே தந்திரம்' வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இன்று அவரது பிறந்தநாள் என்றாலும், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். அவர்களுடன் இணைந்த படக்குழுவும், முன்பு அறிவித்ததை போலவே கடந்த ஜூலை 28ம் தேதி காலை ‘ஜெகமே தந்திரம்' படத்தில் இருந்து ரகிட ரகிட ரகிட என்ற பாடலை வெளியிட்டது. 

தனுஷ் குரலில் ஒலிக்கும் "எனக்கு ராஜாவா நான் வாழுறேன்... என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக இணையத்தில் வெறித்தனமாக கலக்கி வரும் இந்த பாடல் தற்போது குறுகிய நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வளம்வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com