முகப்புகோலிவுட்

‘நாங்கலாம் அப்பவே அப்படி’ குழந்தைப்பருவ போட்டொவை வெளியிட்ட கார்த்தி-சூர்யா ஹீரோயின்.!

  | June 26, 2020 17:33 IST
Rakul Preet Singh

தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன்-2' மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழில் எச். வினோத் இயக்கத்தில் கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று', செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் ‘என்.ஜி.கே' போன்ற சில பிரபலமான திரைப்படங்களில் நடித்து தமிழில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

தற்போது, சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன்-2' மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்' ஆகிய படங்களில் நடித்து வரும் ரகுல், சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கிவரும் நடிகையாவார். அவர் தனது உடற்பயிற்சி, யோகா, தம்பியுடனான விளையாட்டு, சமூகவலைதள சவால்கள் என வழக்கமாக வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு, ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருக்கிறார். தற்போது நெட்டிசன்களிடையே சிறந்த நடிகைகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

m99tfta8

இப்போது, ரகுல் ப்ரீத் சிங் தனது அழகிய குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், அதை “1993 முதல் யோகா” என்று தலைப்பிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் ரகுல் குழந்தை பருவத்திலிருந்தே உடற்பயிற்சி உணர்வுடன் இருந்துள்ளார் என்பதை நிரூபிக்கிறது. இப்போது இந்த அழகான புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com