முகப்புகோலிவுட்

திரைப்படமாகும் சசிகலாவின் வாழ்கை ; ராம் கோபால் வர்மா இயக்குகிறார்!

  | April 01, 2019 17:08 IST
Sasikala Biopic

துனுக்குகள்

  • ஜெயலலிதாவின் பயோ பிக்கை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்
  • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்
  • ராம் கோபால் வர்மா சசிகலாவின் வாழ்கையை படமாக்க இருக்கிறார்
 
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போவதாக பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நடந்த அரசியல் மாற்றங்கள் குறித்து விமர்சனம் செய்திருந்தார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் இருந்த நட்பு முதல் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை தண்டனை பெற்றது வரை இப்படத்தில் கூற இருப்பதாக தெரிகிறது.
 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் சசிகலாவின் வாழக்கையை படமாக எடுக்கப்போவதாக அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்