முகப்புகோலிவுட்

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பயோபிக்..! படப்பிடிப்பை துவக்கிவைத்த தாய்.!

  | September 16, 2020 13:57 IST
Ram Gopal Varma

படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது சொந்த வாழ்க்கை வரலாற்றை தயாரிக்கிறார், இது மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது. இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டது.

இயக்குநர் ராம் கோபால் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று படப்பிடிப்பு துவக்கப் பூஜையில் இருந்து சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் முதல் ஷாட்டுக்காக அவரது அம்மா சூர்யாவதி கேமராவை ஆன் செய்து துவக்கிவைத்துள்ளார். மேலும் ராம் கோபாலின் சகோதரி விஜயா முதல் கிளாப்பை அடித்துள்ளார்.

இப்படத்தை தொரசாய் தேஜா இயக்குகிறார். இயக்குநர் தொரசாய் தேஜா வெறும் 20 வயதானவர், அவர் இப்படத்தில் இளைய வயது ராம் கோபால் வர்மாவாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொம்மகு கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் இப்படத்தின் 3 பகுதிகளையும் பொம்மகு முரளி தயாரிக்கிறார். இப்படத்துக்கு ‘ராமு' என்று பெயரிட்டுள்ளது. மேலும், இப்படத்தில் RGV வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களை சித்தரிக்கும் என்றும் கூறப்படுகிறது. படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com