முகப்புகோலிவுட்

ராம் கோபால் வர்மாவின் ‘Climax’ பட டீஸர்; வைரலாகும் மியா மல்கோவாவின் ஹாட் சீன்ஸ்.!

  | May 15, 2020 14:56 IST
Mia Malkova

அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகை மியா மல்கோவாவை முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் காணலாம்.

‘சர்ச்சையின் செல்லப் பிள்ளை' என்று அழைக்கப்படும் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் புதிய திரைப்படமான 'க்ளைமாக்ஸ்' டீஸர் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகை மியா மல்கோவாவை முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் காணலாம்.

ஒரு நிமிடத்துக்கு சற்று அதிகமான நொடிகளுடன் இந்த ஹாட்டான் த்ரில்லர் டீஸரை இயக்குநர் தனது சொந்த யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ‘க்ளைமாக்ஸ்' டீஸரில் நடிகை மியா மல்கோவா ஹீரோவுடன் நீருக்க்குள் நெருகமாக முத்தமிடும் காட்சிகளும், அவர் பாலைவன மணல் படுகையில் அக்ரோபாட்டிக் பாடி ட்விஸ்ட் செய்யும் காட்சிகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

நேற்று மாலை 5 மணிக்கு தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த டீஸர் வெளியீட்டை தெரிவித்த ராம் கோபால் “இது எனக்கு பிடித்த ஸ்டார் மியா மல்கோவாக் உடன் நான் உருவாக்கிய பாலைவனத்தில் அமைக்கப்பட்ட ஒரு பயங்கரமான அதிரடி திரில்லர், கிளிமாக்ஸில் அவரது அற்புதமான நடிப்பால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்" என்றும் “மியா ஒரு இயக்குனர் நடிகை, CLIMAX பற்றிய எனது பார்வைக்கு, அவர் தனது அர்ப்பணிப்பில் நம்பமுடியாத தொழில்முறை நீதியை வழங்கியுள்ளார்” என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த டீஸர் தற்போது செம வைரலாகிவருகிறது. மேலும், இப்படத்தின் ட்ரைலர் மே 18-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று இந்த டீஸரின் கடைசியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராம் கோபால் வர்மா ‘God, Sex and Truth' என்ற ஆவணப்படத்தை இயக்கியிருந்தார். 2018-ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில், மியா மல்கோவா தனது பாலியல், சமூகத்தில் பெண்களின் பங்கு மற்றும் அவர்களைக் கட்ட முயற்சிக்கும் ஆணாதிக்க பிணைப்புகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தி நடித்திருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com