முகப்புகோலிவுட்

ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்! இணையத்தில் வைரலாகும் குயின் போஸ்டர்!!

  | September 07, 2019 18:55 IST
Ramya Krishnan

துனுக்குகள்

 • இந்த வெப் சீரியஸை கவுதம் வாசு தேவ் மேனன் இயக்கி வருகிறார்
 • இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்
 • 6 மணிநேரம் இந்த வெப்சீரிஸ் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ‘குயின்' போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
மறைந்த முன்னால் முதல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஏ.எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி' என்கிற தலைப்பில் இப்படம் உருவாக இருக்கிறது. இதில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக அவர் பயிற்சியும் எடுத்து வருகிறார் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் அமைக்கவுள்ளார்.
 
இதனை அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் ஜெயலலித்தாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்துவருகிறார். இதில்  ஜெயலலிதாவின் இளமைக்காலம், திரையுலக பயணம், அரசியல் நுழைவு உள்ளிட்டவை இடம் பெறுகிறது. இந்த வெப் சீரியஸில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
 
ஜெ பயோபிக்கில் ஜெ வாக மொத்தம் மூன்று நடிகைகள் நடிப்பதாக தகவல் வந்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார் அவருக்கு ஒருநாள் கால்ஷீட்டுக்கு 10 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
`குயின்' வெப் சீரிஸின் படப்பிடிப்பு விரைசில் முடிப்பதற்ககாக இரண்டு யூனிட்டாகச் ஷூட்டிங் நடந்து வருகிறது. ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் காட்சிகளை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, கெளதம் மேனன் இயக்கி வருகிறார். சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் `விஸ்வாசம்' படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவில் `கிடாரி' இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கி வருகிறார். தற்போது குயின் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com