முகப்புகோலிவுட்

'இதோ வந்துட்டுள்ள' - நம்பர் 1 ட்ரெண்டிங்-ஆன 'காடன்' பட ட்ரைலர்

  | February 13, 2020 14:16 IST
Kaadan Movie

ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவர உள்ளது பிரபு சாலமனின் அடுத்த படமான 'காடன்'

துனுக்குகள்

 • 2012ம் ஆண்டு வெளியான 'கும்கி' திரைப்படம்
 • 'இதோ வந்துட்டுள்ள' - நம்பர் 1 ட்ரெண்டிங்-ஆன 'காடன்' பட ட்ரைலர்
 • ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான 'கும்கி' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராணா டகுபதி மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவர உள்ளது பிரபு சாலமனின் அடுத்த படமான 'காடன்'. யானைகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் படமாக இந்த படம் இருக்கும் என்று, இயக்குனர் பிரபு சாலமன் கூறியிருந்தார். ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மூன்று மொழிகளில் ஏப்ரல் மாதம் 2ம் இந்த திரைப்படம் வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ராணா டகுபதி 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.     
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com