முகப்புகோலிவுட்

பிந்து மாதவியின் 'யாருக்கும் அஞ்சேல்' - First லுக் போஸ்ட்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்..!

  | September 17, 2020 11:12 IST
Ranjit Jeyakodi

துனுக்குகள்

  • 2008ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான 'ஆவக்காய் பிரியாணி' என்ற
  • பிரபல இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியாக உள்ள
  • இந்த படத்தின் First லுக் போஸ்ட்டரை நேற்று மக்கள் செல்வன் வெளியிட்டுள்ளார்
2008ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான 'ஆவக்காய் பிரியாணி' என்ற திரைப்படம் தான் பிரபல நடிகை பிந்து மாதவியின் முதல் திரைப்படம். அதன் பிறகு பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் சேரனின் பொக்கிஷம் படத்தின் மூலம் தமிழில் அவர் அறிமுகமானார். வெப்பம், சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபல நடிகர் கிருஷ்ணா நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான கழுகு பாகம் இரண்டு தான் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம். இந்த ஆண்டு மாயன் மற்றும் "யாருக்கும் அஞ்சேல்" ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பிரபல இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியாக உள்ள "யாருக்கும் அஞ்சேல்" திரைப்படத்தின் டப்பிங் பணிகளை  அவர் அண்மையில் தொடங்கி விரைந்து முடித்தார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் ஆரம்ப கால நண்பர் தான் ரஞ்சித் என்பதும் யாரும் அஞ்சேல் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்ட்டரை மக்கள் செல்வன் அண்மையில் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் தற்போது இந்த படத்தின் First லுக் போஸ்ட்டரை நேற்று மக்கள் செல்வன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com