முகப்புகோலிவுட்

ப்பா..! என்ன உடம்பு.., அடுத்த படத்துக்காக பா. ரஞ்சித்தை இம்ப்ரஸ் பண்ண ஆர்யா..!

  | February 22, 2020 08:16 IST
Arya

துனுக்குகள்

 • பா. ரஞ்சித்தின் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்கிறார்.
 • இதில் அட்ட கத்தி தினேஷ், கலையரசன் இணையவுள்ளார்கள்.
 • பாக்சிங் சம்பந்தப்பட்ட கதையில் இப்படம் தயாராகவுள்ளதாம்.

இயக்குநர் பா. ரஞ்சித்துடன் இணையும் அடுத்த படத்துக்கு முழுமையாகத் தயாராகி விட்டதாக ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா அடுத்து ஒரு தரமான கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை ‘காலா', ‘கபாலி' உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்த வெற்றி இயக்குநர் பா.இரஞ்சித் இயக்குகிறார். இப்படம் பாக்ஸிங் போட்டியை மையப்படுத்தி எடுக்கப்படவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தது.

தனது அடுத்தப் படம் குறித்த முக்கியத் தகவலை வெளியிடுவதாக இருதினங்களுக்கு முன் ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில், நேற்று மாலை வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஆர்யா. தனது உடற்கட்டை முற்றிலுமாக மாற்றியுள்ள அவர் “விளையாட்டு மீதான என் காதல் திரையில் நிஜமாகிறது. பா.ரஞ்சித் சாருடனான் அடுத்த படத்தில், வளையத்தில் குத்துச்சண்டை வீரர்களை எதிர்கொள்ள நான் தயார். இது எனது சினிமா வாழ்க்கையின் மிகவும் சவாலான படம். இந்த அனுபவத்தை நேசிக்கிறேன். ரஞ்சித் சார் தனித்துவமானவர்” என்று பதிவிட்டுள்ளார். வியக்கவைக்கும் கட்டுடல் கொண்டுள்ள ஆர்யாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மேலும், இந்த படத்தில் தினேஷ் மற்றும் கலையரசன் இணையவுள்ளோர்களாம். விரைவில் இப்படம் குறித்து மற்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இயக்குநர் பா. இரஞ்சித் மண் உரிமை போராளி பிர்ஸா முண்டா வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com