முகப்புகோலிவுட்

அடுத்த 5 படங்களை அறிவித்த பா. ரஞ்சித்..!

  | December 19, 2019 08:40 IST
Neelam Productions

துனுக்குகள்

  • பா. ரஞ்சித் தற்போது சல்பேட்டா பரம்பரை படத்தை இயக்கிவருகிறார்.
  • அவர் கடைசியாக ரஜினியின் காலா திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
  • அவரின் நீலம் ப்ரொடக்ஷன்ஸில் குண்டு படத்தை தயாரித்துள்ளார்.
இயக்குனர் ரஞ்சித் தனது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் அடுத்ததாக 5 படங்களைத் தயாரிக்கவுள்ளார்.

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி படங்களை இயக்கிய இயக்குனர் பா. ரஞ்சித், சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் நானா படேகர் நடித்த சூப்பர்ஹிட்டான காலா  திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நன்கு பாராட்டப்பட்டது. அதையடுத்து ஆர்யா, தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பத்திரங்களில் நடிக்கும் ‘சல்பேட்டா பரம்பரை' திரைப்படத்தை தற்போது இயக்கிவருகிறார். இதற்கிடையில் மாரி செல்வராஜ் இயக்கிய  ‘பரியேறும் பெருமாள்'மற்றும் அதியன் ஆதிரை இயக்கிய  ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ரஞ்சித் அடுத்ததாக 5 புதிய படங்களை தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அனைத்து படங்களையும் ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸுடன், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க் ஜேக்கப் மற்றும் சுரேஷ் மாரி ஆகியோர் தான் இப்படங்களின் இயக்குனர்கள். இந்த ஐந்து படங்களின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்