முகப்புகோலிவுட்

ராஷ்மிகா பார்த்த முதல் படம் ‘தளபதி’ விஜயின் பிளாக்பஸ்டர்.!

  | May 19, 2020 08:58 IST
Rashmika

ராஷ்மிகா தீவிரமான விஜய் ரசிகர் என்றும், விரைவில் அவருடன் ஜோடி சேர காத்திருக்கும் ஒருவராகவும் நன்கு அறியப்பட்டவர்

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா, சூப்பர்ஹிட் கன்னட திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி'யுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் கீதா கோவிந்தம், சரிலேரு நீக்கேவரு போன்ற பல வெற்றிகரமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்து, இப்போது தென் திரையுலகில் பிரபலமான முகமாக உள்ளார்.

அல்லு அர்ஜுனின் பான் இந்திய பன்மொழி திரைப்படமான புஷ்பாவில் இப்போது கதாநாயகனாக நடிக்கும் ராஷ்மிகா, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

அவர், சமீபத்தில் ரசிகர்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் உரையாடலில் ஈடுபட்டார். அவர்களில் ஒருவர் ராஷ்மிகாவிடம் ‘தியேட்டரில் பார்த்த முதல் படம் எது?' என்று கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில் தான் வைரலாகிவருகிறது. 

ராஷ்மிகா தீவிரமான விஜய் ரசிகர் என்றும், விரைவில் அவருடன் ஜோடி சேர காத்திருக்கும் ஒருவராகவும் நன்கு அறியப்பட்டவர். அவர் அந்த கேள்விக்கு, தியேட்டரில் தனது முதல் படம் ‘கில்லி' என்று பதிலளித்துள்ளார்.

அவரது ட்வீட்டில் "கில்லி என்று நினைக்கிறேன். என் அப்பா என்னை அழைத்துச் சென்றிருந்தார். எனக்குத் தெரியவில்லை, நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் அந்த நாட்களில் ஒரு பெரிய movie buff. இப்போது நான் ஒரு நடிகையாக இருக்கும்போது, அவர் இல்லை" என்று பதிலளித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com