முகப்புகோலிவுட்

“ராட்சசன்” திரைப்படம் வெற்றி களிப்பில் தயாரிப்பாளர்!

  | January 16, 2019 12:43 IST
Ratsasan Success Celebration

துனுக்குகள்

 • விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார்
 • இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்திருந்தார்
 • டில்லிபாபு இப்படத்தை தயாரித்திருந்தார்
விஷ்ணு விஷால்,அமலா பால் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் “ராட்சசன்”. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

முற்றிலும் வித்யாசமான கதைக்களத்தை கொண்டு ஹரார் படமாக வந்த இப்படம் கடந்த வாரம் தொடர் காட்சிகளாக 100 ஆவது நாளை எட்டி உள்ளது.

இப்படத்தை ராம்குமார் இயக்க  ஜிப்ரானின் இசை இந்த படத்திற்கு வலு சேர்த்தது. பி வி ஷங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.100வது நாளை எட்டியதைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு கூறுகையில்,
"100 நாட்கள் என்பது ஒரு சாதனை மட்டும் அல்ல. ஒரு நல்ல தயாரிப்பாளருக்கு மிகுந்த பொறுப்பு உணர்ச்சியாகத்தான் இருக்கும். எனது நிறுவனத்துக்கு இந்த ராட்சதனமாக வெற்றி மேலும் தரமான படங்கள் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தருகிறது" என்றார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com