முகப்புகோலிவுட்

17 ஹீரோக்கள், 22 தயாரிப்பாளர்கள் நிராகரித்த படம் ‘ராட்சசன்’- விஷ்ணு அதிர்ச்சி தகவல்.!

  | July 28, 2020 14:54 IST
Vishnu Vishal

விஷ்ணு விஷால் தற்போது ‘ஜகஜால கில்லாடி’, ‘எஃப்.ஐ.ஆர்’ மற்றும்’கோகன் தாஸ்’ ஆகிய படங்களிலும் நடித்துவருகிறார்.

பிரபல நடிகர் விஷ்ணு தனது ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதில் தேர்ச்சி பெற்றவர். ஒவ்வொரு முறையும் அவர் புதிய கதை மற்றும்  உள்ளடக்கத்துடன் வருகிறார். அந்த வகையில், ராம் குமார் இயக்கத்தில் நடித்த ‘ராட்சசன்' விஷ்ணு விஷால் வாழ்க்கையில் மிக நினைவு கூறத்தக்க திரைப்படங்களில் ஒன்றாக, மிகப் பெரிய ஹிட்டாக மாறியது.

‘ராட்சசன்' ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வென்றது, இது இதுவரை தமிழில் வெளியான சிறந்த திரில்லர் படங்களில் ஒன்றாகப் பார்கப்படுகிறது. இப்படம் வெளியாகி 2 வருடங்கள் நிறைவு செய்யவுள்ள நிலையில், இப்போது விஷ்ணு விஷால் ஒரு ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்துகிறார். ‘ராட்சசன்' கதையை அவருக்கு முன்னதாக 17 ஹீரோக்களும் 22 தயாரிப்பாளர்களும் மறுத்துள்ளனராம்.

விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது பல படங்களின் கதைகள் பல ஹீரோக்களால் நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ‘ராட்சசன்' செய்யும் வாய்ப்பையும் தானும் தவறவிட்டதாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு அந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்ததாக கூற்யுள்ளார்.

அதேபோல், இயக்குனர் ராம்குமாருடன் விஷ்ணு விஷாலின் மற்றொரு சூப்பர் ஹிட் படமான ‘முண்டாசுப்பட்டி' படமும் பல ஹீரோக்களால் மறுக்கப்பட்டது.

சினிமா பார்வையாளர்கள் எப்போதுமே பெரிய திரைகளில் படத்தைப் பார்ப்பதை விரும்புகிறார்கள் என்று விஷ்ணு விஷால் கருதுகிறார், அதனால்தான் OTT வெளியீடுகள் பெரிதாக வேலை செய்யவில்லை என்று கூறுகிறார்.

விஷ்ணு விஷால் அடுத்ததாக பிரபு சாலமன் இயக்கும் ‘காடன்' படத்தில்  காணப்படுவார். மேலும் ‘ஜகஜால கில்லாடி', ‘எஃப்.ஐ.ஆர்' மற்றும்'கோகன் தாஸ்' ஆகிய படங்களிலும் நடித்துவருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com