முகப்புகோலிவுட்

விஜய் ‘பிகில்’ ராயப்பனாக ஆனதற்கு காரணம் சுஷாந்த்தின் ‘சிச்சோரே’ படம்.!

  | June 30, 2020 12:22 IST
Vijay

‘பிகில்’ படத்தில் உண்மையில் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடிக்க சில மூத்த நடிகர்களை அணுகியிருந்ததாக கூறியுள்ளார்.

எம்.எஸ். தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி படப் புகழ் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், சென்ற ஜூன் 14-ஆம் தேதி தற்கொலை செய்து காலமானார் என்பது அனைவருக்கும் தெரியும். இது அவரது ஏராளமான ரசிகர்களையும் பாலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 34 வயதான நட்சத்திரம் தீவிர நடவடிக்கை எடுக்க காரணங்கள் குறித்து பெரும் விவாதம் எழுந்தது. மேலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப்ப்பதிவு செய்யப்பட்டு, பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுவருகிறது.

சுஷாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படங்களில், நிதேஷ் திவாரி இயக்கிய ‘சிச்சோரே'வும் ஒன்று. இதில் சுஷாந்த் டீனேஜ் மகனாகவும், ஒரு தந்தையாகவும் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

இப்போது, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, அட்லீ இயக்கத்தில் பிளாக் பஸ்டரான ‘பிகில்' படத்தில் ‘தளபதி' விஜய் எவ்வாறு இரட்டை வேடங்களில் நடிக்க வந்தார் என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘பிகில்' படத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷிராஃப், கதிர், இந்தூஜா, அமிர்தா அய்யர், வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு விளையாட்டு-நாடகமாக இருந்த இப்படத்தில் விஜய் ‘மைக்கேல் மற்றும் ராயப்பன்' என இரட்டை வேடத்தில் நடித்தார்.

அண்மையில் ஒரு நேர்காணலில், அர்ச்சனா ‘பிகில்' படத்தில் ஆரம்பத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்று திட்டமிடப்படவில்லை என்றும், உண்மையில் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடிக்க சில மூத்த நடிகர்களை அணுகியிருந்ததாகவும் வெளிப்படுத்தியுள்ளார். சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ‘சிச்சோரே' படத்திலிருந்து இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் பார்த்த பிறகு தயாரிப்பாளர்கள் விஜயை இரு வேடங்களிலும் நடிக்க முடிவு செய்ததாக தெரிகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com