முகப்புகோலிவுட்

‘சத்யா’ கமலை போல் வைரலான விஜய் சேதுபதி! போட்டோஷூட் பின்னால் இருக்கும் உண்மை கதை இதான்..

  | July 11, 2020 13:01 IST
Vijay Sethupahi

இந்த புகைப்படங்களைப் பார்த்ததிலிருந்து அவரது எடையைக் குறைக்க ரசிகர்கள் அதிக அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

சமீபத்தில், 2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அரிய பழைய போட்டோஷூட் சமூக ஊடகங்களில் வைரலாகியது. போட்டோஷூட்டில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1988ல் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘சத்யா' படத்தில் இருக்கும் கமல் ஹாசனை விஜய் சேதுபதி ஒத்திருக்கிறார். இந்த புகைப்படங்களைக் கொண்டு விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ‘சத்யா-2' என்ற பெயரில் புதிய போஸ்டர்களை வடிவமைக்கத் தொடங்கினர்.

அண்மையில் ஒரு நேர்காணலில், விஜய் சேதுபதியே இந்த  புகைப்படங்களின் பின்னால் உள்ள உண்மையான கதையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த போட்டோஷூட்டை இயக்குநர் மணிகண்டன் செய்துள்ளார். பிஜய் சேதுபதியின் முதல் படமான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்குப் பிறகு ஒரு படம் செய்யத் திட்டமிட்டிருந்ததாக அவர் கூறினார்.

33kibu6g

கதையை நினைவு கூர்ந்த விஜய் சேதுபதி, “தென்மேற்கு பருவக்காற்று படத்தின் கிளைமாக்ஸுக்கு நான் மொட்டை அடித்திருந்தேன். படம் ஜூலை மாதத்தில் முடிக்கப்பட்டது என நினைக்கிறேன், இந்த புகைப்படங்கள் செப்டம்பரில் எடுக்கப்பட்டது. மணிகண்டன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. சமீபத்தில் அவர் இந்த புகைப்படங்களை எனக்கு பகிர்ந்தார். நான் அதை எனது சில நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன், அவர்களில் ஒருவர் அதை ப்ரொஃபைல் பிக்சராக வைத்திருந்தார். அங்கிருந்து இணையத்திற்கு சென்று வைரலாகிவிட்டதாகத் தெரிகிறது” என்று கூரியுள்ளார்.

இந்த புகைப்படங்களைப் பார்த்ததிலிருந்து அவரது எடையைக் குறைக்க ரசிகர்கள் அவர் மீது அதிக அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வீஜயுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்' பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com