முகப்புகோலிவுட்

'அவர் கடின உழைப்பை காட்டுகிறது..!!' - ஜோதிகாவை புகழ்ந்த ராதிகா சரத்குமார்

  | May 24, 2020 15:43 IST
Ponmagal Vandhaal

துனுக்குகள்

 • ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்'
 • நடிகை ஜோதிகா குறித்து பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தனது
 • அவர் மேற்கொண்ட முயற்சிக்கு உண்மையிலேயே பாராட்டுக்கள்
ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த ஆண்டில் தொடக்கத்தில் வெளியானது, இப்படத்தை JJ Fredrick எழுதி இயக்குகிறார். மேலும் இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது அந்த நிறுவனம் தயாரிக்கும் 9-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் மார்ச் 27ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று எண்ணிய நிலையில் கொரோனா காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிப்போன படங்களில் ஒன்றாக மாறியது. 

அதன் பிறகு சில போராட்டங்களுக்கு பிறகு இந்த படம் வரும் மே 29ம் தேதி நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் பலரின் பாராட்டுகளை பெற்று வருகின்றது. 

தற்போது நடிகை ஜோதிகா குறித்து பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் "நம்பிக்கையுடனும், சரியான உச்சரிப்புடனும் மொழியைப் பேசுவதில் அவர் மேற்கொண்ட முயற்சிக்கு உண்மையிலேயே பாராட்டுங்கள், அவர் மேற்கொண்ட முயற்சிக்கு உண்மையிலேயே பாராட்டுக்கள்", என்று குறிப்பிட்டு ஜோதிகாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com