முகப்புகோலிவுட்

அரவிந்த் சாமிக்கு ஜோடியான ரெஜினா

  | August 22, 2018 15:06 IST
Arvind Swami Next Film

துனுக்குகள்

 • அரவிந்த் சாமி கைவசம் 5 படங்கள் உள்ளது
 • இதில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ரெஜினா டூயட் பாடி ஆடவுள்ளார்
 • இதன் ஷூட்டிங்கை அடுத்த மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளனர்
சித்திக்கின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திற்கு பிறகு நடிகர் அரவிந்த் சாமி கைவசம் நிர்மல் குமாரின் ‘சதுரங்க வேட்டை 2’, செல்வாவின் ‘வணங்காமுடி’, கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’, மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அரவிந்த் சாமி கமிட்டாகியுள்ளார்.

இந்த படத்தை ‘என்னமோ நடக்குது, அச்சமின்றி’ புகழ் ராஜபாண்டி இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ரெஜினா டூயட் பாடி ஆடவுள்ளார்.இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங்கை அடுத்த மாதம் (செப்டம்பர்) துவங்கத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com