முகப்புகோலிவுட்

‘சக்ரா’வில் விஷாலுக்கு வில்லியாக ரெஜினா..?

  | July 02, 2020 16:44 IST
Chakra

இன்னும் படமாக்கப்பட வேண்டிய மீதமுள்ள பகுதிகளில் ரெஜினாவின் முக்கிய காட்சிகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

தமிழில் ‘அழகிய அசுரா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசாண்டரா. இதனையடுத்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் ரெஜினா. தற்போது, ரெஜினா கைவசம் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, கசட தபற, சக்ரா, கள்ளபார்ட், சூர்ப்பணகை என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இப்போது, விஷாலுடன் நடிக்கும் சக்ரா திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா முக்கிய வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷாலின் பிளாக்பஸ்டர் ஹிட் சைபர் கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘இரும்பு திரை' படத்தின் தொடர்ச்சியாக வரவிருக்கும் ‘சக்ரா' படத்தின் ட்ரைலர் இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. நான்கு மொழிகளில் வெளியான இந்த ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ருஸ்தி டாங்கே மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர், அவர்கள் அனைவருக்கும் ட்ரைலரில் காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் காணாமல் போனவர் ரெஜினா. இதனை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ‘சக்ரா' படத்தில் ரெஜினா கசாண்ட்ரா முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்கிறார் என்பதும், படத்தின் முக்கிய அம்சமாகவும் இப்போது வெளிவந்துள்ளது. மேலும், இன்னும் படமாக்கப்பட வேண்டிய மீதமுள்ள பகுதிகள், ரெஜினாவின் முக்கிய காட்சிகள் உள்ளது என்றும் பூட்டுதலுக்கு பின் அவை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com