முகப்புகோலிவுட்

வாடிவாசலுக்குப் பிறகு ‘அடங்கமறு’ இயக்குநருடன் இணையும் சூர்யா..?

  | September 18, 2020 15:35 IST
Suriya

தற்போது வாடிவாசல், அருவா என இரண்டு படங்கள் படப்பிடிப்பைத் தொடங்க காத்திருக்கின்றனர்.

சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று' படத்தை OTT தளத்தில் காண அனைவரும் ஆவலுடன் இருக்கும் இந்நிலையில், வெற்றிமாறனுடனான ‘வாடிவாசல்' படத்தையடுத்து ‘அடங்கமறு' பட இயக்குநர் கார்த்திக் தங்கவேலுவுடன் சூர்யா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், விரைவில் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரிசயாக பல படங்கள் குறித்து தகவல்கள் வெளிவருகையில், இது சூர்யாவின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி தான் என்றே சொல்லலாம்.

இதற்கிடையில், கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறார் சூர்யா. ‘வாடிவாசல்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில், நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாஹ்திரத்தில் நடிக்கவுள்லதாகவும் தகவல்கள் வந்தன. படத்தின் மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினரை தயாரிப்பாளர்கள் இதுவரை அறிவிக்கவில்லை, இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘அருவா' படத்தையும் தனது கைவசம் வைத்திருக்கிறார் சூர்யா.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com