முகப்புகோலிவுட்

யுவன் இசையில் நடிக்க இருக்கும் ரியோ

  | October 15, 2019 13:18 IST
Next Film

துனுக்குகள்

 • சிவகார்த்திகேயன் தயாரித்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் ரியோ
 • தற்போது பத்ரி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ரியோ.
 • யுவன் சங்கர் ராஜா தான் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார்
சின்னதிரையில் இருந்து வெள்ளிதிரைக்கு வந்து டாப் ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். இவரை பின் தொடர்ந்து ரோபோ சங்கர், மாகாபா ஆனந்த், கவின் உள்ளிட்ட சின்னதிரை நட்சத்திரங்கள் திரைப்படங்களில் நடிக்க துவங்கினர். ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற படத்தின் மூலம் இந்த வரிசையில் இணைந்தார் ரியோ.

சிவகார்த்திகேயன் தயாரித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் ரியோ. அதனை தொடர்ந்து தற்போது பத்ரி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ரியோ. அதர்வா நடித்த ‘பாணா காத்தாடி', ‘செம போதை ஆகாத' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பத்ரி வெங்கடேஷ். இவர் தனது மூன்றாவது படத்தை ரியோ வைத்து இயக்கவுள்ளார்.

‘பாணா காத்தாடி', ‘செம போதை ஆகாதே' ஆகிய படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா தான் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com