முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த பட ஹீரோ 'சரவணன் மீனாட்சி' ரியோ

  | August 23, 2018 16:02 IST
Rio Raj

துனுக்குகள்

 • ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்
 • சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘கனா’
 • இதில் ஹீரோவாக ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் புகழ் ரியோ ராஜ் நடிக்கவுள்ளார்
‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இதனையடுத்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார்.

தற்போது, சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘கனா’. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்ததோடு, ஒரு பாடலும் பாடி, கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை & டீசர் வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 23-ஆம் தேதி) காலை சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, சிவகார்த்திகேயன் பேசுகையில் தான் தயாரிக்கும் புதிய படம் குறித்து அறிவித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை யூ-டியூபில் ஃபேமஸான ‘ப்ளாக் ஷீப்’ டீம் இயக்கவுள்ளதாம். இதில் ஹீரோவாக ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் புகழ் ரியோ ராஜ் நடிக்கவுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com