முகப்புகோலிவுட்

“முதல் முறையாக அழவைத்த நகைச்சுவை” கிரேஸி மோகனுக்கு இறுதி அஞ்சலி!

  | June 11, 2019 17:34 IST
Crazy Mohan

துனுக்குகள்

  • சிறந்த நகைச்சுவை நாடகக் கலைஞர்
  • சிறந்த வசன கர்த்தாவாக இயக்கியவர்
  • இவரை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்
நாடக ஆசிரியர், நடிகர், வசன கர்த்தா, கதாசிரியர் என பன்முகத்தன்மையோடு இயங்கியவர் கிரேசி மோகன். இவருடைய இயற்பெயர் ரங்காச்சாரி. மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர் 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பிறந்தார்.  ஆண்டு பிறந்தார்.
 
ol3lh15o
 

இவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே நாடகம் எழுதத் தொடங்கிவிட்டார். நாடகத்துறையில் இவருக்கு ஏற்பட்ட அதீத ஆர்வம் அவரை தொடர்ந்து பல்வேறு நாடகங்கள் அமைக்க வழிவகுத்தது.
 
cbi4t22g
 

முதன் முதலில் எஸ்.வி. சேகருக்காக, 'கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' என்று கிரேஸி மோகன் எழுதிக் கொடுத்தார். அந்த நாடகத்தை, எஸ்.வி.சேகர் மேடையேற்றினார். அந்த நாடகத்தின் வெற்றி, அதுவரையில் மோகன் ரங்காச்சாரியாக இருந்தவரை 'கிரேஸி மோகனாக' மாற்றியது.
 
யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையை அள்ளிக்கொடுத்தவர். எவ்வித விமர்சனங்களிலும் சிக்காதவர். தன்னுடைய இயல்பான நடிப்பிலும், இயல்பான வசனங்களாலும் ரசிகர்களை கட்டி இழுக்கும் வல்லமையை அவர் பெற்றிருந்தார்.
 
நடிப்பு, வசனகர்த்தா, நாடகம் என பல துறையில் இயங்கயதோடு சிறந்த ஓவியராகவும் இருந்தார். இசை கற்றுத் தெரிந்தவர். ஆன்மீகதின் மீது அதீதி நம்பிக்கை கொண்டவர். தமிழக அரசின் கலைமாணி விருது பெற்றவர்.
 
 
i21rqtt8
 

சென்னையில் கிரேஸி மோகன் நாடகம் என்றால் அதை காண ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே புறப்படும் அந்த அளவிற்கு அவருடைய நாடகங்கள் புகழ் பெற்றவை.
 
மேடை நாடகங்களில் இருந்து இவரை சினிமாவிற்கு அழைத்து வந்தவர் கமல். இவர்கள் கூட்டணியில் உருவான அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

எப்போது ரசிகர்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருந்தவர் முதல் முறையாக அழவைத்துள்ளார்.  அவருடைய எழுத்தும், படைப்பும் காலம் கடந்தும் நம்மோடு வாழும்.
 
ig7mifdg
 

இவருடைய மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். கமல் மோகன் எப்போது மக்களுக்கு ஏற்றவாறு ஜனரஞ்சகமாக வாழ்ந்த கலைஞர் என்றும், அவர் ஒரு நகைச்சுவை ஞானி என்றம் புகழாரம் சூட்டினார்.  கவிஞர் வைரமுத்து எல்லோரையும் சிரிக்க வைத்த நகைச்சுவை இன்று அழவைத்துவிட்டது என்று பதிவு செய்திருந்தார்.
 
இன்று அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. அவருடைய படைப்புகள் மூலம் அவர் மக்களிடையே வாழ்ந்துக்கொண்டேதான் இருப்பார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்