முகப்புகோலிவுட்

ஆர்.ஜே. பாலாஜி-நயன்தாரா நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் துவக்கம்..!

  | November 29, 2019 17:39 IST
Rj Balaji

துனுக்குகள்

  • மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
  • இப்படத்துக்கு கிரிஷ் இசையமைக்கிறார்.
  • இப்படத்தின் மூலம் ஆ.ஜே. பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.
ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. (புகைப்படங்கள் கீழே)

எல்.கே.ஜி திரைப்படத்தையடுத்து ஆர்.ஜே. பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். எல்.கே.ஜி படத்துக்குக் கதையை மட்டும் எழுதிய அவர், கதாநாயகனாக நடிப்பது முதல் முறை என்பதால், அப்படத்துக்கு இயக்குனராக கே.ஆர். பிரபுவை ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், தனது இரண்டாவது படமான மூக்குத்தி அம்மனுக்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதி, இயக்குனர் என்.ஜே. சரவணனுடன் இணைந்து இயக்கவும் உள்ளார். இயக்குனராக இதுவே அவருக்கு முதல் படமாகும்.

இத்திரைப்படத்தில், அவருடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்கவுள்ளார். இப்படத்தை வேல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. மெரினா, அவள், நயன்தாராவின் ‘நெற்றிக்கண்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், இன்று மூக்குத்தி அம்மனின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் பூஜை போடப்பட்டு, பிறகு நாகர்கோவிலில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. (புகைப்படங்கள் கீழே)

இப்படத்துக்கு ‘தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் கேமராவைக் கையாள, ‘பரியேறும் பெருமாள்' படப்புகழ் ஆர்.கே. செல்வா படத்தொகுப்பை கவனிக்கிறார்.
k1f5i5v
1s8rsrdg
uk3uqsko
gk0hs5do


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்