முகப்புகோலிவுட்

நடிகர் டூ பாடகர்…. ரோபோ ஷங்கரின் புதிய அவதாரம்..!!

  | February 20, 2019 15:15 IST
Kanni Maadam

துனுக்குகள்

  • சீரியல் நடிகரான போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.
  • இவர் நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.
  • இவர் இயக்கும் படத்தில் ரோபோ சங்கர் ஒரு பாடலை பாடியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி' என்ற தொலைக்காட்சி தொடரில் ‘போஸ்' என்ற கதாபாத்திரம் அனைவர் மனதிலும் பதியும் வகையில் இருந்தது வெங்கட்டின் நடிப்பு.  இந்த சீரியலுக்கு பிறகு அவ்வப்போது திரைப்படங்களில் தலைகாட்ட தொடங்கினார். 
 
தீபாவளி, பந்தய கோழி, நகரம், சிங்கம், கோ, தொடரி, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்கள் ஏற்று நடித்து வந்தவர் வெங்கட்.  நடிகனாக வேண்டும் என்பதை தாண்டி இயக்குநராக வேண்டுமென்பது இவருடைய கனவாக இருந்திருக்கிறது. 
 
பல வருடங்கள் கழித்து, தற்போது ‘கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.  இதில் கார்த்திக் சுப்புராஜின் அப்பாவும், நடிகருமான கஜராஜ் மற்றும் ஆடுகளம் படத்தில் நடித்த முருகதாஸ் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.  இந்த படத்தில் புதுமுகங்களான ஸ்ரீராம் மற்றும் காயத்ரி ஆகியோர் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். 
 
அறிமுக இசையமைப்பாளர் ஹரி சாய் இசை அமைக்கிறார்.  இதற்கு நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏப்ரல் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்கிறது படக்குழு. 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்