முகப்புகோலிவுட்

‘ரோபோ’ சங்கர், இப்போ ‘சிங்கர்’ சங்கர் ..!

  | February 08, 2020 09:38 IST
Moonu Kaalu Vaaganam

‘ரோபோ’ சங்கர், இப்போ ‘சிங்கர்’ சங்கர் ..!

கன்னி மாடம் திரைப்படத்தில் முதல் முறையாக ஒரு பாடலைப் பாடியுள்ளார் நடிகர் ‘ரோபோ' சங்கர்.

ரூபி ஃபிலிம்ஸ் பேனரில் ஹஷீர் தயாரிக்க, ஸ்ரீராம் மற்றும் காயத்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘கன்னி மாடம்'. தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து, பின் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் மிக இயல்பாக நடித்து பிரபலமான போஸ் வெங்கட் இப்படத்தின் மூலம் இயக்குநராக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.

இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜே இனியன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு ரிஷால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய மற்றும் சிவசங்கர் கலை இயக்குநராகப் பணி புரிந்துள்ளார். விவேகா பாடல்களை எழுத, தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். இப்படத்திலிருந்து நான்கு பொஸ்டர்கள் இதுவரை வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது. ‘மூனு காலு வாகனம் எனத் தொடங்கும் இப்பாடலை ‘ஆட்டோ ஆன்தம்' என அழைக்கப்படுகிறது. இதனை, சின்னத்திரையில் காமெடியனாக அறிமுகமாகி, பின் கடின உழைப்பினால் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துவரும் ‘ரோபோ' சங்கர் பாடியுள்ளார். இதுவே அவர் முதல்முதலாக பாடியுள்ள பாடலாகும். இப்பாடல் தற்போத்கு இணையத்தில் வைரலாகப் பறவிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்