முகப்புகோலிவுட்

கல்யாண கச்சேரியில் கீபோர்ட் வாசித்த ‘டீனேஜ்’ அனிருத்..! வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

  | April 04, 2020 11:33 IST
Anirudh

அனிருத் தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கு இசையமைத்தும், பாடியும் வருகிறார்.

அனிருத் ரவிச்சந்த்ரன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் அவரது ரசிகர்களால் ‘ராக் ஸ்டார்' என்று அழைக்கப்படுகிறார். அனிருத் தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கு இசையமைத்தும், பாடியும் வருகிறார். இந்நிலையில், யூடியூபில் ஒருவர் வெளியிட்ட அனிருத்தின் பழைய வீடியோ ஒன்று தற்போது செம வைரலாகிவருகிறது. அதில் அவர் ஒரு திருமணத்தில் கீபோர்டு வாசிப்பதைக் காணமுடிகிறது.

இந்த வீடியோவை தற்போது அனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமண கேட்சேரி ஒன்றில் கீபோர்டு வாசிக்கும் வீடியோ.. இந்த வீடியோவை உருவாக்கிய நபருக்கு நன்றி.. மனதை மிகவும் கவர்ந்துள்ளது!” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

‘ஜின்க்ஸ்' எனும் இளம் கலைஞர்கள் கொண்ட இசை குழுவுடன் அவர் கச்சேரிகளில் அப்போதே மேற்கத்திய ஸ்டைல் இசையை தாறுமாறாக வாசித்து வந்துள்ளார். இன்று ‘மாஸ்டர்' படத்திற்காக அவர் இசையமைத்துள்ள பாடல்களை கொண்டாடிவரும் ரசிகர்கள், அனிருத்தின் இந்த டீனேஜ் வயது இசையார்வத்தை சமூக வலைத்தளங்களில் தீயாக பரப்பிவருகின்றனர். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com