முகப்புகோலிவுட்

‘விஜய் 63'யில் வில்லனாக அருண் விஜய் நடிக்கவுள்ளாரா?

  | November 26, 2018 12:58 IST
Vijay 63

துனுக்குகள்

  • விஜய்யின் 63-வது படத்தை அட்லி இயக்கவிருக்கிறார்
  • இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது
  • இதில் வில்லன் வேடத்தில் அருண் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்' படத்தின் வெற்றிக்கு பிறகு ‘தளபதி' விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தை அட்லி இயக்கவிருக்கிறார். ஏற்கெனவே, விஜய் - அட்லி கூட்டணியில் வெளியான ‘தெறி, மெர்சல்' ஆகிய 2 படங்களுமே சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் 63-வது படமான இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விஜய்-க்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார். காமெடியில் கலக்க விவேக் நடிக்கவுள்ளார். ‘இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும், விவேக் பாடலாசிரியராகவும், அனல் அரசு ஸ்டன்ட் இயக்குநராகவும் பணியாற்றவுள்ளனர்.

படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை வருகிற ஜனவரி மாதம் துவங்கவுள்ளனர். படம் அடுத்த ஆண்டு (2019) தீபாவளிக்கு ரிலீஸாகுமாம். இந்நிலையில், இதில் மிரட்டலான வில்லன் வேடத்தில் அருண் விஜய் நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தபோது “பரவி வரும் இச்செய்தி வதந்தியே” என்று தெரிவித்துள்ளனர்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்