முகப்புகோலிவுட்

ஆர்யா திருமணம், ஜோடி பார்த்து திருமண தேதி அறிவிப்பு……

  | February 01, 2019 13:53 IST
Arya

துனுக்குகள்

  • ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார்
  • கஜினிகாந்த் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர்
  • கஜினிகாந்த் படத்திற்கு பிறகு இருவரும் காதலிப்பதாக செய்தி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. பெரும்பாலும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காமெடி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் இவர்.
 
வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வந்த ராஜா ராணி என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ராஜா ராணி படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இவருக்கு எந்த படமும் அமையவில்லை.
 
இந்த நிலையில், தான் தனியார் தொலைக்காட்சியில் நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் இவர் திருமணத்திற்கு பெண் பார்க்கப்பட்டது. அங்கு எதுவும் செட் ஆகவில்லை.
 
இந்த நிலையில், கஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் சினிமாவில் தன்னுடன் ஜோடி சேர்ந்த சாயிஷாவை வாழ்க்கை துணையாக தேர்வு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், இப்படத்திற்கு பிறகு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வரும் மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் வைத்து ஆர்யா – சாயிஷா திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவி வருகிறது. இவர்கள் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
 
ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை இந்த செய்தி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்