முகப்புகோலிவுட்

விஜய்சேதுபதியுடன் இணையும் சாய் தன்ஷிகா!

  | August 13, 2019 17:39 IST
Sai Dhanshika

துனுக்குகள்

 • அரவான், பரதேசி ஆகிய படங்களுக்காக விருது பெற்றவர் இவர்
 • இப்படத்தின் மூலம் முதல் முறையாக விஜய் சேதுபதியோடு நடிக்கிறார் இவர்
 • எஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்கி வருகிறார்
எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருந்கிறார் நடிகை சாய் தன்ஷிகா
 
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லாபம்'. விஜய் சேதுபதி புரடெக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி. இமான் இசை அமைக்கிறார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
 
 
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார் சாய் தன்ஷிகா. ‘பேராண்மை' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் பிரபலமானவர் இவர். தன்னுடைய முதல் படத்தில் துணிச்சலான கல்லூரி மாணவியாக வலம் வந்தவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்தன. ‘கபாலி' படத்தில் ரஜினிக்கு மகளாக ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து அசத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். தெலுங்கு, மலையாளம் என பிற மொழி திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பு திறமையால் தனி அடையாளத்தை பதித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இப்படத்தில் இணைகிறார் சாய் தன்ஷிகா.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com