முகப்புகோலிவுட்

அனுஷ்காவை ‘தேவதை’ என வர்ணித்த சமந்தா.! வைரல் புகைப்படம் உள்ளே..

  | September 22, 2020 16:16 IST
Anushka Sharma

பல பிரபலங்கள் & நடிகர்கள் அனுஷ்காவின் இந்த இனிமையான புகைப்படத்திற்கு கமண்ட் செய்துள்ளனர்.

நடிகை அனுஷ்கா ஷர்மாவின் புதிய நீச்சலுடைப் புகைப்படம் குறித்து நடிகை சமந்தா அக்கினேனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அபிமான கருத்தை பதிவிட்டுள்ளார். சமந்தா அக்கினேனி அனுஷ்காவை ஒரு தேவதை என்று வர்ணித்துள்ளார்.

நடிகை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் கருப்பு நிற நீச்சலுடையில் காணப்படுகிறார். மேலும் அவர் தனது கர்ப்பமான வயிற்றை வெளிப்படுத்தியுள்ளார். பாலிவுட்டைச் சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் அனுஷ்கா ஷர்மாவின் இந்த இனிமையான புகைப்படத்திற்கு கமண்ட் செய்துள்ளனர்.

n79o6gfo

அனுஷ்கா தனது பதிவில், “எனக்கு இரக்கம் காட்டிய மற்றும் இந்த உலகில் நன்மையை நம்ப வைத்த அனைவருக்கும் நன்றி, அதை முன்னோக்கி செலுத்தும் நம்பிக்கையுடன் அதைப் பயிற்சி செய்ய என் இதயத்தைத் திறந்தது” என உலக இரக்க தினமான இன்று அவர் எழுதியுள்ளார். இந்த புகைப்படத்துக்கு தான் சமந்தா அவரை “ஏஞ்சல்” என வர்ணித்துள்ளார்.

பாலிவுட் நடிகையின் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் அவரது சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com