முகப்புகோலிவுட்

ரகசியமாக வெப் சீரிஸில் நடித்து வரும் சமந்தா?

  | August 26, 2019 12:51 IST
Samantha

துனுக்குகள்

 • 96 தெலுங்கு ரீமேக்கல் நடித்து முடித்துவிட்டார் சமந்தா
 • வெப் சீரிஸில் நடித்து வருகிறார் சமந்தா
 • இந்த வெப் சீரிஸ் மூன்று மொழிகளில் உருவாகிறது
தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஓ பேபி'. இந்தப் படம் ‘மிஸ் க்ரானி' என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும். நந்தினி ரெட்டி படத்தை இயக்கியிருந்தார். இதனை அடுத்து இவர் தமிழில் வெளியான ‘96' படத்தின் தெலுங்க ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படங்களை அடுத்து அவர் வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார். இதனால் சமந்தா திரைத்துறையை விட்டு விலகிவிட்டார் என்றெல்லாம் வதந்தி பரவியது.  
 
குறித்து விசாரித்த போது, அவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவது தெரிந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் சென்னையில் தான் நடைபெற்று வருகிறதாம். இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் தனக்கு புதியதோர் பரிமாணத்தைக் கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறாராம். ஆகையால் வெப் சீரிஸ் பணிகளை முடித்துவிட்டுத் தான் புதிய படத்துக்கான கதை கேட்கும் பணிகளைத் தொடங்கவுள்ளார். என்கிறது சினிமா பட்சிகள்!!!
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com