முகப்புகோலிவுட்

நாகர்ஜுனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மருமகள் சமந்தா.!

  | August 29, 2020 19:34 IST
Nagarjuna

தனது வாழ்க்கையின் முக்கியமான நபர்களில் ஒருவராக நாகர்ஜுனாவை கூறும் சமந்தா, ஒரு இதயப்பூர்வமான குறிப்பைப் பகிர்ந்து கொண்டார்.

டோலிவுட் நட்சத்திரம் நாகார்ஜுனா இன்று தனது 61-வது பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைதளங்கள் முழுவதும் பிறந்தநாள் வாழ்த்துக்களால் நிரம்பியுள்ளது. அவரது மகன்கள் நாக சைதன்யா, அகில் அக்கினேனி, அவரது மருமகள் மற்றும் நடிகை சமந்தா அக்கினேனி, ரகுல் ப்ரீத் சிங், மகேஷ் பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

lhan9bhg

Common DPஐ பகிர்வதன் மூலம் அவரது ரசிகர்கள் அவருக்கு, ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் நாகர்ஜுனாவின் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நிரம்பியுள்ளது.

தனது வாழ்க்கையின் முக்கியமான நபர்களில் ஒருவராக நாகர்ஜுனாவை கூறும் சமந்தா, ஒரு இதயப்பூர்வமான குறிப்பைப் பகிர்ந்து கொண்டார். அவர் த்னது ட்விட்டர் பக்கத்தில், “என் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்களில் ஒருவரை வாத்துகிறேன். உங்கள் அயராத ஆதரவு மற்றும் நிலையான வழிகாட்டுதல் மற்றும் வழிநடத்துதலுக்கு மிக்க நன்றி. நீங்கள் பொதுவாக வெளிப்படுத்தும் அனைத்து அரவணைப்பும், இரக்கமும் நிறைந்த ஒரு மகிழ்ச்சியான அற்புதமான பிறந்தநாள் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவுக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com