முகப்புகோலிவுட்

தோழியுடன் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற சமந்தா! வைரலாகும் போட்டோ!

  | July 02, 2019 19:31 IST (Andorra)
Samantha

துனுக்குகள்

  • ஓ பேபி படத்தை நந்தினி ரெட்டி இயக்கி இருக்கிறார்
  • இப்படம் வரும் ஜுலை 5ல் வெளியாக இருக்கிறது
  • பிரபல டி.வி தொகுப்பாளினி ரம்யா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாலமே இயங்கி வருகிறது. 'சூப்பர் டீலக்ஸ்' படத்தைத் தொடர்ந்து பி.வி. நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள படம் ‘ ஓ பேபி'.டி. சுரேஷ் பாபு, சுனிதா டாட்டி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் லக்ஷ்மி, ராஜேந்திர பிரசாத் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாக இந்த படம் உருவாகி இருப்பதால்  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
இந்நிலையில் நடிகை சமந்தா தனது தோழியான விஜே ரம்யாவுடன் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று தரிசனம் செய்துள்ளார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வி.ஜே ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் “ஓ பேபி” படத்திற்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓ பேபி திரைப்படம் வரும் ஜுலை 5ல் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்