முகப்புகோலிவுட்

சமூகவலைதளங்களில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ள வைத்த சமந்தா..!

  | June 10, 2019 19:12 IST
Samantha

துனுக்குகள்

  • சமந்தா நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார்
  • தெலுங்கு, தமிழ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்
  • ஓ பேபி என்கிற படத்தில் நடித்து வருகிறார் இவர்
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவதர் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவிக் மகன் நடிகர் நாக சைத்தன்யாவை கடந்த 2017 அக்டோபர் மாதம் திருமணம் செய்துக்கொண்டார்.
 
திருமணத்திற்கு பிறகு சமந்தா ருத் பிரபு என்னும் அவருடைய பெயரை  சமந்தா அக்கினேனி என்றானது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் சமந்தா கர்ப்பமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
 
oouhahko


இந்நிலையில் இது குறித்து வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சமந்தா நான் கர்ப்பமாக இருக்கனா? எப்போது அதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் எங்களுக்கும் சொல்லுங்கள் என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.
 
மேலும்,  தனது ட்விட்டரில், சமந்தா ‘பேபி அக்கினேனி' எனப் பெயரை மாற்றியிருப்பது, அவர் கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருந்த நிலையில், தான் நடிக்கும் 'ஓ பேபி' படத்தை புரோமோட் செய்வதற்காகத்தான் ட்விட்டரில் பெயர் மாற்றம் செய்திருக்கிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்