முகப்புகோலிவுட்

தாவர உணவுகளுடன் 48 நாள் யோகா பயிற்சியில் முழு வீச்சாக இறங்கிய சமந்தா.!

  | June 30, 2020 18:06 IST
Kaathuvaakula Rendu Kaadhal

சமந்தா அடுத்ததாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் சிறந்த கதாநாயகிகளில் ஒருவரான நடிகை சமந்தா சமூக ஊடகங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் சமந்தா எப்போதும் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட நபராக அறியப்படுபவர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது ஒர்க்அவுட் வீடியோக்களையும் பலமுறை பகிர்ந்துள்ளார்.

அண்மையில், அவர் தனது 48 நாள் ஈஷா கிரியா யோகா வைத் தொடங்கினார். அவர் யோகா பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் இனையத்தில் செம வைரலாகிவருகிறது.

இப்போது அவர், தனது இன்ஸ்டாகிராமில் தாவர அடிப்படையிலான உணவு முறைகள் மீதான தனது காதல் பற்றி கூறியுள்ளார். அவர் தனது பதிவில், “உணவு உங்கள் மருந்தாகவும், உங்கள் மருந்து உங்கள் உணவாகவும் இருக்கட்டும் - ஹிப்போகிரட்டீஸ். நாம் சாப்பிடுவதற்கும் நமது ஆரோக்கியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நாம் நம்பிக் கொண்டு இருக்கிறோம்.. இன்னும் சொல்லப்போனால், அதை ‘மறுத்து' வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..." என்று அவர் கூறி, ஒரு சில தாவர அடிப்படையிலான சுவையான உணவுகளின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். 7 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களில் பலருக்கும் இவரது குறிப்புகள் உபயோகமாக இருக்கும் என நம்புகிறோம்.


கடைசியாக தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோருடன் ‘சூப்பர் டீலக்ஸ்' படத்தில் கானப்பட்ட சமந்தா, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com