முகப்புகோலிவுட்

அரசியல்வாதியாக களமிறங்கும் சமந்தா

  | February 11, 2019 12:31 IST
Samantha

துனுக்குகள்

  • சூப்பர் டீலக்ஸில் விஜய்சேதுபதியுடன் நடிகை சமந்தா நடிக்கிறார்
  • விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் படத்திலும் சமந்தா நடிக்கவிருகிறார்
  • இந்த படத்தில் சமந்தா ஒரு அரசியல்வாதியாம்.
ஆரண்ய காண்டம் பட இயக்குநரின் அடுத்த படமான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். நடிகை சமந்தா. ‘சூப்பர் டீலக்ஸில்' வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கான பின்னணியும் சமந்தாவே பேசியுள்ளார். 

இந்நிலையில் தற்போது தெலுங்கில் ‘ஓ பேபி எந்த சக்ககுன்னவே'. ‘மஜிலி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் டில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'துக்ளக்' படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசியல் த்ரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் சமந்தா ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறாராம். இது குறித்த தகவல்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்