முகப்புகோலிவுட்

‘மாயா’ புகழ் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் சமந்தா.! சுவாரசியமான தகவல்கள் உள்ளே..

  | September 18, 2020 19:32 IST
Vignesh Shivan

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகை சமந்தா கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார், மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கு இடையில் மாறி மாறி, இரு மொழிகளிலும் தொடர்ச்சியான வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார்.

கடைசியாக தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்' படத்தில் காணப்பட்ட அவர், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்கவுள்ளார்.

tnji8728

இப்போது, சூப்பர்ஹிட் த்ரில்லர் திரைப்படங்களான ‘மாயா' மற்றும் ‘கேம் ஓவர்' ஆகிய படங்களை இயக்கிய பிரபலமான இயக்குநர் அஸ்வின் சரவணனுடன் சமந்தா இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர் ஒரு மாற்றுத்திறனாளியாக சவாலான கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் பிரசன்னாவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com