முகப்புகோலிவுட்

நடிப்பதை நிறுத்திவிட சமந்தா முடிவு..? சமூக வலைதளங்களில் பரவும் தகவல்..

  | August 02, 2020 00:12 IST
Samantha

சில மாதங்களுக்கு முன்பு, நடிப்பை விட்டுவிட்டு குடும்பத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக பரவிய வதந்திகளை சமந்தா மறுத்தது குறிப்பிடத்தக்கது.

சமந்தா அக்கினேனி சந்தேகத்திற்கு இடமின்றி தென்னிந்திய பொழுதுபோக்கு துறையில் ஒரு சிறந்த நடிகையாவார். கடைசியாக தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோருடன் ‘சூப்பர் டீலக்ஸ்' படத்தில் கானப்பட்ட சமந்தா, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் கொரோனா லாக்டவுன் முடிவுக்கு வந்ததும் தொடங்கப்படவுள்ளது.

இந்த படங்களின் அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தனது அடுத்த வரவிருக்கும் படங்களை முடித்த பின்னர் நடிப்பிலிருந்து அவர் விலகத் திட்டமிட்டுள்ளதாகக் இப்போது ஒரு புதிய அறிக்கை சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

வெளிப்படையாக, சமந்தா தயாரிப்பில் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்க, அவரது நடிப்பு வாழ்க்கை அவரை மிகவும் பிஸியாக வைத்திருக்கிறது. இந்த செய்தி குறித்து சமந்தா எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், ரசிகர்கள் அதை எல்லா தளங்களிலும் பகிர்ந்துகொள்வதால் அது சமூக ஊடகங்களை புயலாக தாக்கியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, சமந்தா நடிப்பை விட்டுவிட்டு குடும்பத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் வதந்திகளைத் துடைத்து, எந்த நேரத்திலும் நடிப்பிலிருந்து விலகத் திட்டமிடவில்லை என்று சமந்தா கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்போது பரவிவரும் தகவல்களும் வதந்திகளாகவே முடியும் என்பதையே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com