முகப்புகோலிவுட்

சமந்தாவிற்கு பிரம்மாண்ட கட்அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்!

  | July 03, 2019 19:26 IST
Samantha

துனுக்குகள்

 • ஓ பேபி படத்தை நந்தினி ரெட்டி இயக்கி இருக்கிறார்
 • வரும் 5ம் நாள் இப்படம் வெளியாகிறது
 • ஹைதராபாத்தில் இவருக்கு பிரம்மாண்ட கட்அவுட் வைக்கப்பட்டிருக்கிறது
பொதுவாகவே முன்னணி நடிகர்களின் படம் வெளியாகிறது என்றால் அந்த படத்திற்கு பிரம்மாண்ட கட்அவுட் வைப்பது போஸ்டர் ஒட்டுவது என்பது ஒரு கலாச்சாரமாகவே மாறி வருகிறது.
 
விஜய்க்கு கோரளாவில் பிரம்மாண்ட கட் வைத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதே போல் அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்கள் அதை விட பெரிய கட்அவுட் வைத்து மிரட்டினார்கள்.
 
செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான என்.ஜி.கே படத்திற்கு சூர்யா ரசிகர்கள் அஜித், விஜய் ரசிகர்களை விட ஒருபடி மேலே சென்று 215 அடி உயர கட் அவுட் வைத்து கொண்டாடினார்கள். இவர்களின் வரிசையில் தற்போது சமந்தாவும் இணைந்திருக்கிறார். ஆம் வரும் 5ம் தேதி தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் ஓ பேபி படத்திற்கு ஹைதரபாத்தில் உள்ள ஒரு திரையரங்ளில் பிரம்மாண்ட கட்அவுட் வைத்துள்ளனர் அவரது ரசிகர்கள். அதை போட்டோ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இதனைப்பார்த்து சமந்தா அதிர்ச்சி அடைந்திருப்பதாக பதிவிட்டிருக்கிறார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com