முகப்புகோலிவுட்

‘உனக்கு நிகர் யாரும் இல்லை’ அட்டகாசமான செல்ஃபியை வெளியிட்ட சமந்தா.!

  | September 11, 2020 21:29 IST
Samantha

தமிழில் கடைசியாக தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்' படத்தில் சமந்தா காணப்பட்டார்.

சமந்தா அக்கினேனி தனது ரசிகர்களை தொடர்பிலேயே வைத்துக்கொள்ளவும், புதிய பதிவுகளை இடுவதன் மூலம் தன்னைப் பின்தொடர்பவர்களை மகிழ்விக்கவும் தனக்கென ஒரு வழியை கொண்டுள்ளார் என்று சொல்லலாம். சோஷியல் மீடியாவில் புதிய புகைப்படங்களை பகிரும்போதெல்லாம் அவரது செய்தி ஒரு ரவுண்டு அடிக்காமல் ஓயாது.

இன்று, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் தனது நாய் Hash-உடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க போஸ் கொடுத்துள்ளார்.

புகைப்படத்தில், சமந்தா ஒரு சாம்பல் நிற டாப்ஸ் மற்றும் கருப்பு நிற பேண்டையும் அணிந்து அட்டகாசமாக காட்சியளிக்கிறார். அவர் தனது புகைப்படத்துடன் “எந்த ஃபில்டரும் இல்லாமல் குறைபாடற்றவராக உணர, உங்கள் சொந்த முயற்சியில் மாயாஜாலமாக உணர, உங்கள் சொந்த சருமத்தில் நம்பிக்கையை உணர, ஏனென்றால் உண்மையிலேயே உங்களைப் போல் யாரும் இல்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

பணி முன்னணியில், கடைசியாக தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோருடன் ‘சூப்பர் டீலக்ஸ்' படத்தில் காணப்பட்ட சமந்தா, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com