முகப்புகோலிவுட்

சமந்தாவின் 'யூ டர்ன்' டிரெய்லரை வெளியிட்ட அனிருத்

  | August 17, 2018 14:49 IST
Samantha

துனுக்குகள்

  • ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன் குமாரே இதனை இயக்குகிறாராம்
  • இதில் சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்
  • படத்தை செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘யூ டர்ன்’. ‘லூசியா’ புகழ் பவன் குமார் இயக்கியிருந்த இப்படம் அங்கு சூப்பர் ஹிட்டானது. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இதில் ஷரதா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் வெர்ஷன்களில் ‘குயின் ஆஃப் சவுத் இந்தியா’ நடிகை சமந்தா நடிக்கிறார்.

மேலும், ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா, நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன்குமாரே இதனை இயக்குகிறாராம். மிஸ்ட்ரி – த்ரில்லர் ஜானரைக் கொண்ட இப்படத்தை ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் – VY கம்பைன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரெய்லரை பிரபல இசையமைப்பாளர் அனிருத் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்